ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?

15.01.2026 13:40:11

ஜனநாயகன் படம் கடந்த 9ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை 21ஆம் தேதி நடக்கும் என கூறப்பட்ட நிலையில், KVN நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றத்தில் இன்று(15.01.2026) வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில், KVN நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும், ஜனநாயகன் வழக்கில் ஜனவரி 20ஆம் தேதியே உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் வருகிற 20ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படம் வெளிவருமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.