ETR.FM

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம்

16.11.2021 08:16 1 நிமிட வாசிப்பு
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் சந்திரசேகர் என்பவர் வீட்டின் மேற்கூரை நள்ளிரவில் சரிந்து விழுந்ததில், சந்திரசேகர், மனைவி, சரோஜா, மகள் புனிதா, பேரன் பூரனேஷ், பேத்தி பவதாரணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்