தர்மன் ரிலீஸோடு மோதுறோம்!.

30.08.2026 12:50:29

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எனவே, ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அஸ்வத் மாரிமுத்துவுக்கு சென்றது.

அதுதான் தற்போது தர்மனக மாறியிருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சுந்தர்.சி விஷால், தமன்னாவை வைத்து புருஷன் என்கிற படத்தை துவங்கினார்.  ஒருபக்கம் ரஜினி படத்திலிருந்து விலகியதில் சுந்தர்.சிக்கு ஏதோ மன வருத்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது..

அதனால் ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாகும் அக்டோபர் 15ம் தேதி தனது புருஷன் படத்தை மோதவிட அவர் திட்டமிட்டிருந்தாராம்.  ஆனால் படப்பிடிப்பு முடியாத நிலையில் ரஜினியின் தர்மன் படம் பொங்கலுக்கு வெளியாகும் போது அந்த படத்தோடு மோதுவது என சுந்தர்.சி முடிவெடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது..

விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் தோல்வியடைந்துவிட்ட நிலையில் அந்த தோல்வியை தூக்கி எறிந்து விட்டு சுந்தர்.சி இயக்கத்தில் புருஷன் படத்தின் நடிக்க போய்விட்டாராம் விஷால்.