பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!

17.06.2026 14:02:00

தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆக்ஷன் படமா என அனைவரையும் வியக்க வைத்தது பிளாஸ்ட். பேமிலி ஆக்ஷன் டிராமா என்கிற கதைக்களத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    

 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த நிலையில், முதல் நாளிலிருந்து குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்த இப்படத்தை கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், இதுவரை பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.