விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ படத்தின் டீசர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக, குதிரையில் விஜய் தேவரகொண்டா செல்வது போன்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரணபாலி’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள, இத்திரைப்படம் அக்டோபர் 16 ஆம் திகதி திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னதாக ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக இருவரும் இந்த புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.