ETR.FM

ஜனாதிபதியை சந்தித்து உரையாடுகிறது TNA

16.06.2021 09:29 1 நிமிட வாசிப்பு
ஜனாதிபதியை சந்தித்து உரையாடுகிறது TNA

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. இச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. எனினும் சந்திப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலைமைப்பு, தமிழ் சிறைக்கைதிகள், காணி விடுவிப்பு மற்றும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக புளெட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது, புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்