துரந்தர் The Revenge முதல் நாள் இமாலய வசூல்!

20.03.2026 08:04:47

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துரந்தர் 2 (Dhurandhar The Revenge) படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருந்தது. ஹிந்தியில் மட்டுமே படம் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படம் வரவில்லை. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

வந்திருக்கும் தகவல்களின்படி துரந்தர் The Revenge படம் முதல் நாளில் உலக அளவில் மொத்தம் 230 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறதாம். அதிகாரபூர்வ வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் நெட் வசூல் வந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கூறியுள்ளனர்.

ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு போடப்பட்ட பிரீமியர் காட்சிகளில் மட்டுமே இந்த படம் 45 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.