ETR.FM

சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பக் கூட்டணியில் இந்தியா?

16.11.2026 14:00 2 நிமிட வாசிப்பு
சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பக் கூட்டணியில் இந்தியா?

சீனா மேம்பட்ட தொழில்நுட்பங்களை, குறிப்பாக உயர்தர செமிகண்டக்டர் சிப்களைப் பெறுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இஸ்ரேல், ஐக்கிய இராச்சியம், தென் கொரியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘நீடித்த செழிப்புக்கான பாதுகாப்பான அடித்தளங்கள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில்’ (San Francisco Declaration on the Secure Foundations of Enduring Prosperity) இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவையும் அடுத்த வாரம் இந்த ஒப்பந்தத்தில் இணையக்கூடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் மேம்பட்ட சிப்கள் சீனாவுக்குக் கொண்டு செல்லப்படுவது குறித்து வொஷிங்டன் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவு தொடர்பான சர்ச்சை இதற்குப் பின்னணியாக உள்ளது.

இந்த ஒப்பந்தமானது, சீனக் கட்டுப்பாட்டில் உள்ள விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும், முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் பங்காளர் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்