கருப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
20.03.2026 08:13:38
|
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ஷூட்டிங் முடித்து நீண்ட காலம் ஆகும் நிலையில் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் படக்குழுவை தொடர்ந்து கேட்டு வந்தனர். இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தான் மீண்டும் படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறேன், விரைவில் ரிலீஸ் தேதி உடன் அறிவிப்பு வரும் என தெரிவித்தார். |
|
வரும் மே மாதம் 14ம் தேதி கருப்பு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். |