இந்தியாவின் கொரோனா நிலைவரம் !

28.07.2021 10:17:55

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 928 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 5 இலட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  மேலும் நேற்று ஒரேநாளில் 640 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.