ETR.FM

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயார்.

11.11.2026 08:23 1 நிமிட வாசிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்துள்ள போருக்கு, பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்ற ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கருத்துடன் தாம் உடன்படுவதாக வியன்னாவிலுள்ள சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி மிகைல் உல்யானோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்காவும் ‘பரஸ்பரம்’ என்ற வார்த்தையை வழிகாட்டியாகக் கொண்டு செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்தில், இந்த மோதலை இராணுவ நடவடிக்கைகள் மூலமாகவோ அல்லது தடைகளை அதிகரிப்பதன் மூலமாகவோ முடிவுக்குக் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மாறாக, பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமும், ஈரான் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமுமே இந்த மோதலுக்கு முடிவு காண முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்