ETR.FM

குவாட் மாநாட்டில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள்!

16.11.2026 14:27 1 நிமிட வாசிப்பு
குவாட் மாநாட்டில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள்!

ஆசியான் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக குவாட் மாநாடு மணிலாவில் நாளை மாலை நடைபெறவுள்ளது.

குவாட் அமைப்பானது, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கியது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள குவாட் மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் டகாயிச்சி ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

இந்த மாநாட் டின் போது மோடியும், ட்ரம்பும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாட் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு ட்ரம்ப் சீனா செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடக்கிறது. 

இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆகியோர் சந்திக்கிறார்கள். உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து 3 தலைவர்களும் விவாதிப்பர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்