திடீரென நிறுத்தப்பட்ட வெப்சீரிஸ்

02.05.2024 08:30:38

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.
 

இந்நிலையில் இப்போது அவர் ஷோ ரன்னராக கேங்ஸ் என்ற வெப் சீரிஸை தயாரித்து மேற்பார்வையிடுகிறார். இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கு கேங்ஸ் குருதிப்புனல் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை அமேசான் ப்ரைம் வீடியோ ஒளிபரப்ப உள்ளது.
 

இந்த வெப் தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இந்த வெப் தொடருக்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு பணம் தர அமேசான் ப்ரைம் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அமேசான் அதிகாரிகளோடு சௌந்தர்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.