ETR.FM

சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ .

03.07.2025 07:16 1 நிமிட வாசிப்பு
சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ .

பொலிவூட்  நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இராமாயணம்.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில்,  இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கிளிம்ப்ஸ் வீடியோவை வருகிற ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்