ETR.FM

அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி!

28.03.2026 13:46 1 நிமிட வாசிப்பு
அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி!

தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. இதுவரை அரசியலில் சாதித்த பல பிரபலங்கள் சினிமாவால் பிரபலமாகி பின் அரசியலில் களமிறங்கியவர்கள். இதனால் தமிழ்நாட்டில் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது ஒன்றும் புதியது அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கிய பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இப்போது நடிகர் விஜய்யும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சினிமாவை விட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார், தனது கட்சி வேலைகளை பரபரப்பாக செய்துகொண்டு வருகிறார் விஜய்.

ஏற்கெனவே பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இப்போது இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் என்ட்ரி கொடுத்துள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி போட்டி போட உள்ளாராம்.

      
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்