விஜய் , ராஷ்மிக்காவுக்கு நிச்சயதார்த்தம் நிச்சயமா?

10.01.2024 16:04:12

கீத கோவிந்தம் திரைப்படம் மூலம் ஒரு ஜோடியாக மக்கள் மனதை கவர்ந்தவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்க அழகாக இருப்பதாக ஆரம்பித்த கிசுகிசு தான் இவர்கள் உண்மையில் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்குமே என ஆரம்பித்து இவர்கள் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

 

இருவரும் அவர்களுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் தனித்தனியாக காதல் போஸ்ட்களை பகிர்ந்து வந்தாலும் அதிகாரபூர்வமாக காதலிப்பதாக எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

இந்நிலையில் , விஜய் தேவர்கொண்டாவுக்கும் , ராஷ்மிக்கா மந்தனாவுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் உலாவி வருகின்றது. இந்த தகவலுக்கு எந்த ரியக்ஷனும் பண்ணாமல் இருவரும் இருந்தாலும் அத்தகவல் பொய்யானது என அவரகளின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.