ETR.FM

படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழு

02.08.2023 12:43 1 நிமிட வாசிப்பு
படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழு

ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘டியர்’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'டியர்'. இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் படக்குழு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்