ETR.FM

சஜித்தை ஆதரிப்பது கட்சியின் தீர்மானம் இல்லை

02.09.2024 08:44 1 நிமிட வாசிப்பு
சஜித்தை ஆதரிப்பது கட்சியின் தீர்மானம் இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

    

இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாகவும் அவர தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளதுடன்டிஅது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்