விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!.

22.01.2026 14:06:58

மத கஜ ராஜா, ஆக்சன், ஆம்பள போன்ற படங்களில் விஷாலும், சுந்தர்.சியும் இணைந்து பணியாற்றினார்கள். தற்போது நான்காவது முறையாக புருஷன் படத்தில் இணைந்துள்ளனர்.  தலைவர் 173 படத்திலிருந்து  சுந்தர்.சி விலகியதை அடுத்து விஷால் படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்தான், இந்த படத்தின் டைட்டில் புரமோ தற்போது வெளியாகியிருக்கிறது
.. வீட்டுக்குள் பொண்டாட்டிக்கு அடங்கியிருக்கும் புருஷனாக விஷால் இருந்தாலும் ரவுடிகளை துவம்சம் செய்யுமளவுக்கு அவரிடம் வீரமும், தைரியம் உண்டு. ஆனால், இது அவரின் மனைவி தமன்னாவுக்கு தெரியாது என்பது போல கதையை எழுதி இருக்கிறார் சுந்தர்.சி.

சீரியல் நடிகராக யோகி பாபுவை காட்டுகிறார்கள். அதே யோகி பாபு தமன்னாவின் வீட்டுக்கு வந்து அவரிடம் ஜொள்ளுவிடுகிறார். அப்போது அவர்களுக்கு டீ போடுவதற்காக சமையல் அறைக்கு போகும் விஷால் அங்கே வரும் துவம்சம் செய்ய  அதை யோகி பாபு பார்த்து ஷாக் ஆவது போல புரோமோ வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

சுந்தர்.சி படம் என்பதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது. மேலும், தமன்னா இருப்பதால் கவர்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. எனவே, புருஷன் திரைப்படம் ரசிகர்களை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.