வசூலில் பட்டையை கிளப்பும் டிசி.
ராக்கி,சாணிக் காயிதம், கேப்ப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் திரைப்படம் டிசி . இந்தப் படத்தின் மூலம் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
படத்தில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்திலும், வாமிகா கபி சந்திரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அருண் மாதேஸ்வரனின் ஆக்ஷன் காட்சிகளுடன், அனிருத் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர் .
இதனிடையே, டிசி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான முதல் 4 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.43.90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இன்னும் ஓரிரு நாட்களில் டிசி திரைப்படம் ரூ.50 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.