ஜேசன் சஞ்சய் ராக்ஸ்.

01.08.2026 09:18:23

முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அதேநேரம் குடும்ப பிரச்சினை காரணமாக விஜய் நீலாங்கரையில் வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார். அவரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் அவருடன் இல்லை. இதில் மகனும், மகளும் சென்னையில் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

மனைவி சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஒருபக்கம், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு ஜேசன் சஞ்சய்  பேட்டி கொடுத்தார். அப்போது பேட்டியை தொடங்குவதற்கு முன் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி ‘முதலமைச்சர் மகனை உட்கார வச்சுக்கிட்டு அதை கேளு.. இதை கேளுன்னு சொல்றாங்க.. எதை பேசினால் திட்டுவாங்க.. எதை பேசினால் திட்ட மாட்டாங்க.. ஒன்னும் புரியல’ என புலம்ப ஜேசன் சஞ்சய் உடனே ‘அதை உங்கள் மைண்ட்ல இருந்து எடுத்துடுங்க’ என பிரியதர்ஷினியை கூல் செய்து பேட்டியை தொடங்கினார்.