ரீமேக் ஆகும் “காசேதான் கடவுளடா”

08.07.2021 10:27:57

முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியாகிய பிரபல திரைப்படமான ”காசேதான் கடவுளடா” திரைப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதில் நடிகர் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவா நடிக்கவுள்ளதுடன், தேங்காய் சீனிவாசனாக  யோகிபாபுவும், மனோராமாவாக ஊர்வசியும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.