சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

24.11.2024 07:13:00

சமீபகாலமாக சிம்பு தனது ஒவ்வொரு படத்துக்கும் இடையில் பெரிய இடைவெளியை எடுத்துக் கொள்கிறார். பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு நடிப்பில் எந்த படமும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போது கமல்ஹாசனோடு தக் லைஃப், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் மற்றும் தேசிங் பெரியசாமி இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
 

இந்நிலையில் சிம்பு சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருடைய தந்தை T ராஜேந்தர் இயக்கி நடித்த உறவைக் காத்த கிளி திரைப்படத்தில் சிம்பு ஒரு வயது குழந்தையாக நடித்திருந்தார். அதன் பிறகு TR இயக்கிய பல படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
 

பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவான சிம்பு இதுவரை 47 படங்களில் நடித்துள்ளார். உறவைக் காத்த கிளி திரைப்படம் ரிலீஸாகி 40 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து TR சிம்புவின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் கொண்டாட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.