பீகாரில் 46 பேர் உயிரிழப்பு!

27.09.2024 08:12:03

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்

மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும்
உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள்/குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, உயிரிழந்த சிறுவர்கள்/குழந்தைகள் எண்ணிக்கை 37 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது.

இதுகுறித்து மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.