ETR.FM

இயக்குனர் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன தனுஷ்!

23.11.2025 13:51 1 நிமிட வாசிப்பு
இயக்குனர் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது Tere Ishk Mein என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28ம் தேதி) ரிலீஸ் ஆக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன் இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய தனுஷிடம் காதல் பற்றி கேட்டதற்கு, அது overrated emotion என கூறி இருந்தார்.

தனக்கு எப்போதும் ஏன் காதல் தோல்வி அடைவது போன்ற ரோல்களை மட்டுமே கொடுக்கிறீர்கள் என தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல் ராயிடம் கேட்டாராம். அதற்கு அவர் "உனக்கு தான் சிறப்பான love failure மற்றும் heartbroken face இருக்கிறது" என அவர் கூறினாராம். அதை சமீபத்திய நிகழ்ச்சியில் கூறி சிரித்து இருக்கிறார் தனுஷ்.

      
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்