பராசக்தி திரைப்படத்தின் OTT ரிலீஸ் ?

01.02.2026 13:56:56

சிவகார்த்திகேயன், தென்னிந்திய சினிமா கொண்டாடும் இளம் நடிகர்களில் டாப்பில் இருக்கும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பில் திறமைகளை வெளிக்காட்டி முன்னேறியவர். இவரை தங்களது வாழ்க்கையில் உதாரணமாக வைத்திருப்பவர்கள் பலர் உள்ளனர்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியாகி இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

2026, பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 10ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக மாணவர்கள் நடத்தியி போராட்டம் குறித்து பேசும் படமாக பராசக்தி அமைந்தது. கதை முக்கியமானது என்றாலும் திரைக்கதை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.

படத்தில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனை தாண்டி ஜெயம் ரவி நடிப்பு படத்தில் அதிகமாக பேசப்பட்டது என்றே கூறலாம். திரையரங்குகளில் வெளியாகி ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ள இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வந்துள்ளது.

இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.