பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக மாநில அரசுகளின் முடிவே இறுதியானது

29.07.2021 08:28:19

பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக மாநில அரசுகளின் முடிவே இறுதியானது, மத்திய அரசு இதில் தலையிடாது என்று மத்திய இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டது. முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையினால் பாதிப்பு அதிகளவில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது, எனவே அடைக்கப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் கூறுகையில்,

“பெரும்பாலான ஆசிரியர்கள் 18-44 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர் எனவே ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாகவும் மாநில அரசுகளே முடிவு செய்யலாம். பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இறுதி முடிவெடுக்கும் முழு சுதந்திரம் உண்டு. மத்திய அரசு இதில் தலையிடாது.

பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வரை போடப்பட்டுள்ள தடுப்பூசி சதவீதம் எவ்வளவு என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ, யுஜிசி மற்றும் பிற கல்வி அமைப்புகளுக்கு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.” இவ்வாறு தெரிவித்தார்.