ETR.FM

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!.

10.11.2026 13:07 1 நிமிட வாசிப்பு
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான் என்கிற படத்தில் நடிக்க தொடங்கி பிச்சைக்காரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அதன்பின் பல படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்துவிட்டார்.
 

இந்நிலையில்தான், அப்பா குட்டி என்கிற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். மனைவி இல்லாமல் மகளை வளர்க்கும் விஜய் ஆண்டனி.. அவர் சந்திக்கும் சில பிரச்சனைகள்.. நீதிமன்றத்தில் வழக்கு என படம் பரபரப்பாக செல்கிறது. இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அப்பா குட்டி படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்