ETR.FM

சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.

15.11.2026 08:59 1 நிமிட வாசிப்பு
சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.

தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி.  சமீபகாலமாகவே ஹாரர் கலந்த காமெடி மற்றும் சாமி திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கிய அரண்மனை சீரியஸ் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
 

அந்த நம்பிக்கையில் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கினார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் 20.72 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது..

இந்த திரைப்படம் ரூ.90 முதல் 100 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் கேங்கர்ஸ் என்கிற படத்தை இயக்கிய நடித்திருந்தார் சுந்தர்.சி. அந்த படமும் தோல்வி.. தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் தோல்வி பட்டியலில் சேர்ந்துள்ளது..

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்