ETR.FM

பிரச்சனையில் சிக்கிய விடாமுயற்சி.

13.11.2024 07:07 1 நிமிட வாசிப்பு
பிரச்சனையில் சிக்கிய விடாமுயற்சி.

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
 

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள போதும், இதுவரை படக்குழு உறுதியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
 

விடாமுயற்சி படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அதற்காக விடாமுயற்சி படக்குழு காத்திருக்கும் நிலையில் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தாடி வைத்த கெட்டப்போடு நடித்து வருகிறாராம். ஆனால் விடாமுயற்சி படத்தில் அவருக்கு தாடி இல்லாத கெட்டப்பாம். அதனால் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர்தான் அஜித் ‘விடாமுயற்சி’ படத்துக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்