தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மது மற்றும் கஞ்சா போதையில் கொலைகள் நடக்கிறது. அதிலும், முன்விரோதம் காரணமாக ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த தீபாவளியன்று கூட தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தது.
அதில் 10க்கும் மேற்பட்டோர் ரவுடிகள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றி 3வது நாளாக தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் கார்த்தி, டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோருடன் 3வது நாளாக விஜய் ஆலோசனை நடத்தினார். இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், சிறைத்துறை ஏடிஜிபி சங்கர், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.