ETR.FM

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.

20.11.2026 09:14 1 நிமிட வாசிப்பு

தமிழ் திரையுலகில் கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜே மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ராஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், விஜே பப்பு, ஜி.எம். குமார், ராம்ஸ் மற்றும் தோழர் எல்.வி. ஆதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிராமப்புற வாழ்க்கை, குடும்ப உணர்வுகள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி. ஜூட் அனந்த் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான டீசரைத் தொடர்ந்து தற்போது டிரெய்லரும் வெளியாகியுள்ள நிலையில், ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்