ETR.FM

வழிதெரியாமல் கூட நான் அரசியலுக்கு வரமாட்டேன்".

10.11.2026 13:18 1 நிமிட வாசிப்பு
வழிதெரியாமல் கூட நான் அரசியலுக்கு வரமாட்டேன்".

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் அகரம் அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, தனது அரசியல் நுழைவு குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விடமாட்டேன்" என்று தெளிவாக கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வதால் அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை என்றும், ஒரு குடிமகனாக மெளனமாக, உன்னிப்பாக அரசியலை கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது அகரம் அறக்கட்டளை மூலம் செய்யும் சமூக பணிகளைப் பற்றி பேசிய சூர்யா, "நாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைகளை சேவை என்று சொல்ல மாட்டேன்; அது எங்களின் பொறுப்பு. இதற்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசியல் ஈடுபாடு குறித்து மேலும் பேசிய அவர், மனதிற்கு பிடித்து முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட முடியும் என்றால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், இளைஞர்கள் அரசியலை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE மண்வாசனை