12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
|
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, ராட்சசன், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். |
|
இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. முதல் பாகத்தை விட, பல மடங்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் கட்டா குஸ்தி 2 வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் உலகளவில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கட்டா குஸ்தி 2, 12 நாட்களில் உலகளவில் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ளது. |