ETR.FM

‘கர்ணன்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

14.02.2021 11:08 1 நிமிட வாசிப்பு
‘கர்ணன்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரத்தம் சொட்ட சொட்ட, தனுஷ் கைவிலங்குடன் இருப்பது போன்று அமைந்துள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்