வேகமெடுக்கும் தனுஷின் அரசியல்!
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். இந்நிலையில்தான் தனுஷுக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தனுஷ் ‘நமது ரசிகர்கள் அடுத்து கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது போல பேசியிருந்தார்.
இந்நிலையில், தனுஷின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறாராம். மாவட்டவாரியாக நிர்வாகிகள் நியமித்ததுடன் புதிய ரசிகர் மன்றங்கள் தொடங்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறாராம்.
தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த தலைவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷுக்கு வலது கரமும், ரசிகர் மன்ற தலைவருமான இயக்குனர் சுப்பிரமணிய சிவா இதற்கான பணிகளை செய்து வருகிறாராம்.