அஜித் படத்திலிருந்து மோகன்லால் விலகிய காரணம்!.

27.08.2026 13:07:00

அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்த படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. பல முயற்சிகளுக்கு பின் அந்த படத்தை தானே தயாரிப்பது என்கிற முடிவை அஜித் எடுத்தார்.
 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அந்த படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பேசப்பட்டும் வந்தது. ஆனால், அவர் டேர் டெவில் படத்திலிருந்து விலகிவிட்டார்.

அவருக்கு மிகவும் குறைவான சம்பளத்தை கொடுக்க அஜித் முன் வந்தததால்தான் அவர் டேர் டெவில் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கால்ஷீட் பிரச்சனையால் நடிகை ஸ்ரீலீலாவும் இந்த படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.