ETR.FM

ஜெயிலர் 2 குறித்து பாலிவுட் நடிகை.

15.11.2026 08:46 1 நிமிட வாசிப்பு
ஜெயிலர் 2 குறித்து பாலிவுட் நடிகை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை அபேக்ஷா போர்வால் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ரஜினிகாந்தின் தனித்துவமான நடிப்பு பாணி குறித்துப் பேசிய அபேக்ஷா, ஒரு பிரம்மாண்டமான வணிக திரைப்படத்தில் நடிக்கும்போது, அப்படத்திற்கு தேவையான பாணியையும், காட்சிப்படுத்தலையும் புரிந்துகொண்டு நடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். சிறிய நுணுக்கங்களில் கூட ரஜினி சார் தனது தனித்துவமான முத்திரையை பதிப்பார் என்றும், ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களோடு எளிதில் ஒன்றக்கூடிய கலைஞர் அவர் என்றும் புகழ்ந்துள்ளார்.

மேலும், இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடித்தது மிகச்சிறந்த அனுபவம் என்று அபேக்ஷா குறிப்பிட்டுள்ளார். மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் பழகியதாகவும், சக நடிகர்களை மிகவும் சௌகரியமாக உணர வைத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்