சேயோன் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் பகிர்ந்த போட்டோ!.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து சாதித்து காட்டியவர். இவரை தொடர்ந்தே பல சின்ன திரை பிரபலங்களுக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
அதேநேரம் அடுத்த வெளியான பராசக்தி, மதராசி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது தாய்க்கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிட்ப்பு கடந்த சில நாட்களாகவே மதுரை ஒட்டிய பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஒரு மலையின் அருகே ஒரு கல்லின் மீது நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘அழகான இடம்.. அழகான டீம்.. அழகான தொடக்கம்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.