ETR.FM

7 நாட்களில் த்ரிஷ்யம் 3 செய்துள்ள வசூல்!

29.05.2026 07:51 1 நிமிட வாசிப்பு
7 நாட்களில் த்ரிஷ்யம் 3 செய்துள்ள வசூல்!

கடந்த வாரம் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 3 திரைப்படம் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இதை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளிவந்த நிலையில், இப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர்.

 

இரண்டு பாகங்களும் வெற்றிபெற்ற நிலையில், த்ரிஷ்யம் 3 எப்போது என தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் த்ரிஷ்யம் 3 உருவாகி கடந்த மே 21ஆம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் த்ரிஷ்யம் 3 உலகளவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம் இனி வரும் நாட்களிலும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்