ETR.FM

பஹ்ரைன் உள்துறை அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை.

15.11.2026 09:05 1 நிமிட வாசிப்பு
பஹ்ரைன் உள்துறை அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை.

பஹ்ரைன், தமது குடிமக்களையும் வதிவிடவாசிகளையும் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் குறித்த மேலதிக விபரங்களை அது வெளியிடவில்லை.அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் (Fifth Fleet) தலைமையகமாகவும் பஹ்ரைன் விளங்குகிறது.

பஹ்ரைன் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் இரண்டு வெவ்வேறு எச்சரிக்கைகளை இன்று வெளியிட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வளைகுடா நாட்டொன்றில் வெளியிடப்பட்ட முதலாவது எச்சரிக்கைகள் இவையாகும்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை ரேடார் (early-warning radar) மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் காவல்படை (Revolutionary Guards) அறிவித்து இரண்டு நாட்களின் பின்னர் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், எவ்வித பாதிப்புகளும் இன்றி ஈரானின் இரண்டு ஆளில்லா விமானங்களை (drones) தாம் இடைமறித்து அழித்துவிட்டதாகக் கூறி, ஈரானின் இந்தக் கோரிக்கையை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்