ஒன்ஸ் மோர் படத்தின் வசூல் இவ்ளோதானா!.

30.08.2026 12:29:52

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். ஒரு கட்டத்தில் படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம்தான் ஒன்ஸ்மோர்.
 

இந்த படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.. இந்த படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார்.. ஒரு நல்ல ஒரு பீல் குட் காதல் திரைப்படமாக ஒன்ஸ்மோர் உருவாகி இருப்பதாக இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன..

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என சொல்லப்படுகிறது. முதல் நாளில் 27 லட்சம் வசூல் செய்ததாகவும், இரண்டாம் நாளான நேற்று இப்படம் 44 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இரண்டு நாட்களில் ஒன்ஸ்மோர் திரைப்படம் 71 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இதே படத்தோடு வெளியான ஹாய் திரைப்படம் இரண்டு நாட்களில் நான்கு கோடி வரை வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது..