ETR.FM

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 .

27.10.2025 14:35 1 நிமிட வாசிப்பு
ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 .

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இப் படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஷபீர் ஆகியோர் நடித்திருந்த நிலையில், படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாறிருக்க தற்போது வேட்டுவம் படத்தில் ஆர்யா பிஸியாக நடித்து வருவதால் அந்தப் பணிகளை முடித்துவிட்டு சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கான பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்.

இப் படத்தின் படபிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்