அதோடு ஜனநாயகன் படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் விஜயையும், ஆட்சியையும் எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஒருபக்கம் திரையுலகில் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயை எனக்கு பர்சனலாக தெரியும். அவர் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். நாங்கள் கூட தாமதமாக வருவோம்.. ஆனால், விஜய் காலை 8 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். வேலையில் டெடிகேஷனோடு இருப்பார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வேகமாக கற்றுக் கொள்வார். ஆள்தோட்ட பூபதி பாடலில் 35 வினாடிகள் ஒரே ஷாட்டில் நடனம் ஆட வேண்டும்.. அப்போது, விஜய்க்கு கடுமையான முதுகு வலி.. ஆனாலும் மாஸ்டரை ஆட சொல்லி ஒரே முறைதான் பார்த்தார்.
அவ்வளவுதான்.. ஷாட்டில் அது போலவே ஆடிவிட்டார். இப்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். எனவே எல்லாவற்றையும் சரியாக கற்றுக்கொண்டு ஒரு சிறந்த முதலமைச்சராக அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.