சூப்பர் மேன் கதையில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

27.08.2026 13:05:00

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நடிக்க துவங்கி அதன்பின் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், FIR, கட்டா குஸ்தி, கட்டா குஸ்தி 2 போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
 

அதிலும், கட்டாகுஸ்தி 2 படம் 50 கோடியை தாண்டி வசூல் செய்துவிட்டது. இந்நிலையில்தான், விஷ்ணு விஷால் ஒரு சூப்பர் மேன் கதையில் நடிக்கவிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த படத்தை FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கவிருக்கிறார். அதோடு, இந்த படம் 75 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். விஷ்ணு விஷால் நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட். இந்த படத்தை விஷ்ணு விஷாலோடு சேர்த்து 2 முன்னணி ஃபைனான்சியர்கள் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.