ஷாலினி அஜித் தயாரிக்க நடிகர் அஜித் நடிக்கும் 64வது படம்!

04.08.2026 14:03:20

கடந்த வருடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அடுத்தடுத்து அஜித்தின் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விடாமுயற்சி திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் மாஸாக ஓடியது. கதை கதை, அஜித்தின் மாஸ், பாடல்கள் என எல்லாமே பக்காவாக அமைய கடந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் படம் நடிப்பார் என்று பார்த்தால் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வந்தார், போட்டியிடும் ரேஸ்களிலும் வெற்றிப்பெற்று வந்தார்.

கார் ரேஸ்கள் முடித்த பின்னரே படங்களில் நடிக்க கமிட்டாவேன் என்றிருந்தார்.

ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக களமிறங்க நடிகர் அஜித் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். Dare Devil என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அனிருத் இசையமைக்கிறாராம்.