டாக்டர் பட்டம் வாங்கிய நடிகை ஸ்ரீலீலா.
12.02.2026 12:38:55
தெலுங்கு கன்னட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா. கன்னடத்தை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தார். விஜய் நடித்து உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ஒரிஜினல் வெர்சனான பகவந்த் கேசரி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில்தான் தமிழில் மமிதா பைஜூ நடித்திருக்கிறார். பராசக்தி இவரின் முதல் நேரடி தமிழ் படமாக அமைந்தது. தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார். மும்பையில் உள்ள DY பாட்டில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியிருக்கிறார் ஸ்ரீலீலா. இவருக்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.