ETR.FM

பஞ்சாப்பில் இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன்

02.07.2022 17:15 1 நிமிட வாசிப்பு
பஞ்சாப்பில் இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன்

பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுவனை அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்