வெற்றிமாறனை அழைத்து வாய்ப்பு கொடுத்த விஜய்!

30.08.2026 12:41:21

விஜய் அரசியலுக்கு வரும் முன் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் படம் இயக்காதது ஏன் என்கிற காரணத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.

பீஸ்ட் படத்தில் கமிட் ஆகும் முன் விஜய் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவர்கள் ஸ்கிரிப்ட் தயார் செய்ய ஒரு வருடம் ஆகும் என கூறிவிட்டனர். அதனால் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்தார். அவர்கள் விஜய்யை இயக்கி இருந்தால் நான் இசையமைத்து இருப்பேன் என ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.