|
திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். |
|
இது குறித்து முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் செல்வி தேன்மொழி (22) மற்றும் அக்காப்பகத்தில் தங்கியிருந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் செல்வி விஜயலட்சுமி (16) த/பெ. வெங்கடேஷ், செல்வி அல்லி (14) த/பெ. வெங்கடேஷ், செல்வி பூமிகா (13) த/பெ. வெங்கடேஷ் மற்றும் நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி வள்ளியம்மாள் (16) த/பெ. சேகர் ஆகியோர் நேற்று (09.11.2026) காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் கிராம பெரிய ஏரியில் குளிப்பதற்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. |